இந்தியா-இங்கிலாந்து 3-வது டெஸ்ட் போட்டி – நாளை தொடக்கம்…!

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி,நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிரா ஆனது. இதனையடுத்து,லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றது.இதனால்,தற்போது இந்தியா 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில்,இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் ,நாளை (25-ம்தேதி) தொடங்குகிறது.இதற்காக,இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.மேலும்,2-வது டெஸ்டில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, அடுத்த மூன்று டெஸ்டுகளிலும் வென்று இத்தொடரைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில்,இங்கிலாந்து அணையின் வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட்,வலது தோள்பட்டையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக விலகி உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
Wishing you a speedy recovery, @MAWood33! ????
???????????????????????????? #ENGvIND ????????
— England Cricket (@englandcricket) August 23, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025