ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட புதிய திட்டம்.., தமிழகத்தில் தனியாருக்கு குத்தகைக்குச் செல்லும் பொதுச்சொத்துக்கள்!

Default Image

மத்திய அரசு நாட்டிற்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு விட முடிவு செய்துள்ள நிலையில், அதில் தமிழகத்தில் சில சொத்துக்களும் உள்ளது.

மத்திய அரசின் தேசிய சொத்துக்கள் குத்தகை திட்டத்தின் கீழ் சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள 6 விமான நிலையங்கள் தனியாரிடம் விட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 491 கிமீ தேசிய நெடுஞ்சாசலை, தூத்துக்குடி துறைமுகத்தின் சில சொத்துக்களும் தனியாருக்கு விடப்பட உள்ளன. மேலும், நீலகிரி மலை ரயிலுக்கு தனியார் குத்தகை பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்றும் தகவல் கூறப்படுகிறது.

இதனிடையே, நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தேசிய பணமாக்கல் பைப்லைன் (National Monetisation Pipeline) தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி திரட்டும் நோக்கில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை விற்பனை செய்யும் திட்டம் தான் தேசிய பணமாக்கல் பைப்லைன் திட்டமாகும்.

இந்த திட்டம் மூலம் அடுத்த 4 வருடத்தில் மத்திய அரசின் எந்தெந்த சொத்துக்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது எனப் பட்டியலிடப்படும் என்றும்  மத்திய அரசு நாட்டிற்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விட்டு அதன் மூலம் ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட புதிய திட்டம் என்றும் தனியாருக்கு விற்கப்படவில்லை எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்