மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்: சந்தானம் குழு அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் விசாரணை !
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில்,பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு விசாரணை நடத்தியது. இரண்டாம் கட்ட விசாரணையின் ஒருபகுதியாக நேற்று மதுரை மத்திய சிறையில் நிர்மலா தேவியிடம் சந்தானம் குழு விசாரணை நடத்தியது.
இந்நிலையில் இன்று அருப்புக்கோட்டைக்குச் சென்ற சந்தானம் குழுவினர் தேவாங்கர் கல்லூரியில் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தானம் 31-ஆம் தேதிக்குள் விசாரணை நிறைவடையாது என்றும் சிறையில் இருக்கும் இரண்டு பேர் சி.பி.சி.ஐ.டி. கட்டுப்பாட்டில் இருப்பதால் அடுத்த வாரம் அவர்களிடம் விசாரணை நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.