“தொண்டர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம்” – தேமுதிக தலைவர் விஜயகாந்த்…!

Default Image

தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வருகின்ற ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.இந்நிலையில், தனது பிறந்தநாளான ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

“2005 ஆம் ஆண்டு கழகம் தொடங்கப்பட்ட பிறகு 2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை “வறுமை ஒழிப்பு தினமாக” கடைப்பிடித்து வருகிறோம்.

“இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கான பல உதவிகளை செய்து வருகிறோம்.

தமிழகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் தற்போது தான் குறைந்து வரும் நிலையில், பெருங்கூட்டம் கூடினால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது. எனவே அனைவரின் நலன் கருதி எனது பிறந்தநாள் அன்று தொண்டர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம். கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், அவரவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்களால் இயன்ற உதவிகளை ஏழை எளிய உ மக்களுக்கு செய்து பிறந்தநாளை கொண்டாடுங்கள். மேலும் உடல்நல பரிசோதனைக்காக விரைவில் வெளிநாடு செல்ல இருக்கிறேன்.

கொரோனா தொற்று இன்னும் குறையாத நிலையில், அனைவரின் நலன் கருதி, 25 ஆகஸ்ட் 2021 பிறந்தநாளான்று தொண்டர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”,என்று பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்