காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய புகைப்படங்கள்.!
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கியது. இதுவரை 80% படப்பிடிப்பு முடிந்த நிலையில், இந்த வார இறுதிக்குள் முழு படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், படத்தில் தனக்கான படப்பிடிப்பை நடிகை சமந்தா முடித்துள்ளார். தனது காட்சிகளை முடித்த கொண்டாட்டதில் நடிகை சமந்தா நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி ஆகியோருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதற்கான புகைப்படங்களும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#KaathuVaakulaRenduKaadhal | #Samantha | #VijaySethupathi | #Nayanthara pic.twitter.com/7KJxHICb2y
— Dinasuvadu Cinema (@CinebarTamil) August 23, 2021