சென்செக்ஸ் குறியீடு 384 புள்ளிகள் உயர்வில் இருந்து 135.64 புள்ளிகள் உயர்வாக குறைவு!
இன்று காலை இந்திய பங்குசந்தையில் சென்செக்ஸ் குறியீடு எண் அதிகப்படியாக 55,781 புள்ளிகள் வரையில் உயர்ந்துள்ளது.
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. அப்போது சென்செக்ஸ் 133.81 புள்ளிகள் அதிகரித்து, 55,463.13 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 104.50 புள்ளிகள் அதிகரித்து, 16,555 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் குறியீடு எண் 384.11 புள்ளிகள் அதிகரித்து, 55,713.43 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 111.60 புள்ளிகள் அதிகரித்து, 16,562.10 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதனையடுத்து 1,085 பங்குகள் ஏற்றத்திலும், 507 பங்குகள் சரிவிலும், 115 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது. பிட்காயின் மதிப்பு 50000 டாலரை தொட்டு உள்ளது.
இதற்கிடையில் தற்போது மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 135.64 (0.25%) புள்ளிகள் அதிகரித்து, 55,464.96 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 21.25 (0.13%) புள்ளிகள் அதிகரித்து, 16,471.75 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்படுகிறது. பங்குச்சந்தை வார தொடக்க நாள் என்பதால் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
இன்று காடில்லா நிறுவனஹெல்த்கேர் பங்குகள் 7% வரையில் காலையில் அதிகரித்து காணப்பட்டது. இது நிறுவனம் அவசர தேவைக்கு (EUA) பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், இந்த பங்கின் விலையானது அதிகரித்து வருகிறது. தற்போது இந்த பங்கின் விலையானது 3.37% அதிகரித்து, 551 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.