மரபை மீறி நடைமுறை விதியை மீறி கோடநாடு எஸ்டேட் விவகாரத்தை விவாதிப்பதா? – ஜெயக்குமார்

Default Image

சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்க கூடிய நிலையில், கோடநாடு விவகாரம் குறித்து பேச அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டியிருப்பது பேரவை மரபை மீறிய செயல் என்று அதிமுக முன்னாள் ஜெயக்குமார் குற்றசாட்டியுள்ளார்.

இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக இன்றே விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று சபாநாயகரிடம் அறிவிப்பு நோட்டிஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கிறது. கோடநாடு விவகாரம் குறித்து பேச அறிவிப்பு நோட்டீஸ் அளித்திருப்பது, ஒரு அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அறிவிப்பு.

விதி எண் 55ன் கீழ் அவரச பொது முக்கியத்துவம் வாய்ந்தவை விவாதிகப்படுவது வழக்கம். இதில், இயற்கை பேரிடர், தீ விபத்து, வெள்ளம் இதுபோன்ற பல பிரச்சனைகள் குறித்து அவரச அறிவிப்பு நோட்டீஸ் கொடுத்து விவாதிப்பது வழக்கம்.

ஆனால், மரபை மீறி நடைமுறை விதியை மீறி கோடநாடு எஸ்டேட் விவகாரத்தை விவாதிப்பதா? என கேள்வி எழுப்பி, ஜனநாயகவாதிகள் சிந்தித்து பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். கோடநாடு விவகாரம் குறித்து பேச அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்கப்பட்டியிருப்பது பேரவை மரபை மீறிய செயல் என்று குற்றசாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்