பார்த்தாலே நாவில் எச்சில் ஊரும் மிளகு குழப்பு எப்படி செய்வது …?
மிளகு அதிக அளவு மருத்துவ குணம் கொண்டது. சளி,இருமல் பிரச்சினைகளுக்கு தீர்வு தரக்கூடிய மிளகு நமது உடலுக்கும் மிகவும் நல்லது. வீட்டில் காய்கறிகள்எ துவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மிளகு இருந்தால் போதும். இதை வைத்து எப்படி அட்டகாசமான மிளகு குழம்பு செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- மிளகு
- கடலைப்பருப்பு
- தனியா தூள்
- உளுந்தம் பருப்பு
- வரமிளகாய்
- தேங்காய் துருவல்
- புளி
- நல்லெண்ணெய்
- கடுகு
- சீரகம்
- பெருங்காயத்தூள்
- மஞ்சள்தூள்
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- உப்பு
- கருவேப்பிலை
- கொத்தமல்லி
செய்முறை
தாளிக்க : முதலில் அடுப்பை பற்ற வைத்து கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் மிளகு, சீரகம், தனியா, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகிய அனைத்தையும் நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், 2 ஸ்பூன் தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்.
அரைக்க : மிக்ஸி ஜாரில் நாம் வறுத்து வைத்துள்ள அனைத்தையும் மொத்தமாக சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்க : நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும். பின்பு தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். இந்த குழம்பில் இருந்து எண்ணெய் தனியாக பிரிய தொடங்கியதும் மீண்டும் தீயில் வைத்து கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கினால், அவ்வளவுதான் அட்டகாசமான சுவையில் மிளகு குழம்பு தயார்.