#breaking: முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் கல்யாண் சிங் காலமானார்.!

Default Image

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் லக்னோவில் செப்சிஸ் மற்றும் பல்வேறு உறுப்பு செயலிழப்பு காரணமாக இன்று காலமானார்.

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான 89 வயதான கல்யாண் சிங் லக்னோவில் செப்சிஸ் (sepsis) மற்றும் பல்வேறு உறுப்பு செயலிழப்பு காரணமாக இன்று காலமானார். கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி உடல்நிலை குறைபாடு காரணமாக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்யாண் சிங்-க்கு நேற்று உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. அவருக்கு சிறுநீரக கோளாறு, இதயக்கோளாறு மற்றும் நரம்பியல் பிரச்சனை இருந்தது. இதனால் அவருக்கு பல்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

ஆனால், சிகிச்சை பலன்றி கல்யாண் சிங் செப்சிஸ் மற்றும் பல்வேறு உறுப்பு செயலிழப்பு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உத்தரபிரதேசத்தின் முதல்வராக ஜூன் 1991 முதல் டிசம்பர் 1992 மற்றும் செப்டம்பர் 1997 முதல் நவம்பர் 1999 வரை கல்யாண் சிங் இரண்டு முறை இருந்தார். அவரது முதல் ஆட்சிக்காலத்தில் தான் டிசம்பர் 6, 1992 அன்று அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பாபர் மசூதி  இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதே நேரத்தில் அப்போதைய பிரதமர் பிவி நரசிம்ம ராவின் அரசாங்கம் உத்தரபிரதேச அரசாங்கத்தை அதே நாளில் தள்ளுபடி செய்தது.

மேலும் கல்யாண் சிங் ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார். உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தின் அட்ராலி நகரில் பிறந்த கல்யாண் சிங், முதன் முதலில் 1967 இல் மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்