முன்னாள் சிஐஏ இயக்குனர் மைக் பாம்பியோ அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்!
மைக் பாம்பியோ ((Mike Pompeo)),அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்தியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக கருத்துக்களை கூறியதால், இவரை தேர்வு செய்ததற்கு ஜனநாயகக் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், மைக் பாம்பியோ நியமனத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அமெரிக்காவின் 70வது வெளியுறவுத்துறை அமைச்சராக அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கருத்து வேறுபாடு காரணமாக, ரெக்ஸ் டெல்லர்சன் பதவிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, முன்னாள் சிஐஏ இயக்குனரான மைக் பாம்பியோவை, அதிபர் டிரம்ப் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.