தனுஷின் மாறன் பட மாஸ் அப்டேட் இதோ.!
மாறன் திரைப்படத்தின் முதல் பாடல் அடுத்த மாதம் 10 – ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல்
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் “மாறன்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த மாதம் 28-ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், தற்போது மாறன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், மாறன் திரைப்படத்தின் முதல் பாடல் அடுத்த மாதம் 10 – ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.