ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…! பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்…!

திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனையில், 4 பெரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முடிவுகள் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி வத்தகவுண்டன் வலசுவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முருகேசன், மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி, மகன் கார்த்திக் ஆகிய 4 பேரும் வைக்கோல் குவிக்கப்பட்டிருந்த இடத்தில், கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில், போலீசார் விவசாயி முருகேசன் குடும்பத்துடன் கொல்லப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பிரேத பரிசோதனையில், 4 பெரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025