ஸ்பெயினில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க கோரி போராட்டம்!
ஆயிரக்கணக்கானோர் ஸ்பெயின் நாட்டில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்களுக்கு குறைந்த தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு நவேரா நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
ஆனால், குற்றவாளிகளுக்கு இந்த தண்டனை போதாது என்று கூறி, அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் மேட்ரிட்டில் குவிந்த ஏராளமானோர், பாலியல் வன்கொடுமையின் கீழ் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்காமல், பாலியல் துன்புறுத்தல் பிரிவில் மிகக்குறைந்த தண்டனை வழங்கியது வெட்கக்கேடாது என்றும் முழக்கமிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.