கொரோனா விதிமீறல் – பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 95 பேர் மீது வழக்குப்பதிவு!

கொரோனா விதிகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 95 பேர் மீது வழக்குப்பதிவு.
நெல்லையில் கொரோனா விதிகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 95 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவும் வகையில் கூட்டத்தை கூட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒண்டிவீரன் நினைவுநாள் நிகழ்ச்சியில் விதிகளை மீறியதாக காங்கிரஸ், அதிமுகவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.