டெல்லியில் ஓடும் காரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்!
ஓட்டுனரும், சகபயணியும். டெல்லி அருகே, வாடகை காரில் சென்ற பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி மது கொடுத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் Greater Noida-வில், நேற்றிரவு பணி முடிந்து, வாடகை காரில் பெண் ஒருவர் வீடு திரும்பி கொண்டிருந்த போது, இச்சம்பவம் நடந்துள்ளது.
காரில் ஓட்டுனருடன் மற்றொரு பயணியும் இருந்துள்ளார். இருவரும் அந்த பெண்ணுக்கு கட்டாயப்படுத்தி மது கொடுத்து, ஆள் நடமாட்டமில்லாத Jarcha பகுதியில், பலாத்காரம் செய்துவிட்டு தப்பினர். பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக, காவல்துறையினர் 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.