மேகதாதுவில் அணை காட்டினால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும் – பிரேமலதா விஜயகாந்த்!

Default Image

மேகதாதுவில் ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்க முடியாது என பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். 

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிகளை கைவிடக்கோரி ஓசூரில் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டிராக்டரில் பிரேமலதா ஊர்வலமாக வந்து, அதன் பின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பியுள்ளார். பின் பேசிய அவர், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும் எனவும், தஞ்சைக்கு நீர் வரவில்லை என்றால் விவசாயம் கேள்விக்குறியாகி விடும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஓசூர் வரை வந்து விட்டோம், இன்னும் பெரும் படையாக திரட்டிப் பெங்களூருக்குள் நுழைய முடியும். ஆனால், நமக்குள் பிரிவினை வேண்டாம் என தமிழக விவசாயிகள் சார்பில் கூறிக்கொள்கிறேன். தமிழ்நாடு மக்கள் காந்தியாக இருக்கவேண்டுமா, சுபாஷ் சந்திரபோஷாக  இருக்க வேண்டுமா என கர்நாடகா தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மேகதாதுவில் ஒரு செங்கல் கூட வைப்பதற்கு விட மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார். கர்நாடக மக்கள் மற்றும் தமிழக மக்களிடையே பிரிவினை இல்லை. அது போல தண்ணீரிலும் இந்த பிரிவினை வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் மத்தியில் ஆளும் பாஜக தான் கர்நாடகாவிலும்  ஆட்சி செய்கிறது. எனவே மத்திய அரசு கர்நாடக அரசிடம் பேசி மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்