உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார் இந்து மல்ஹோத்ரா!
உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார் இந்து மல்ஹோத்ரா.
உச்சநீதிமன்ற நீதிபதியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலையடுத்து மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா இன்று பதவியேற்றுக்கொண்டார். ஆனால் மற்றொரு நீதிபதியான கே.எம். ஜோசப்பின் நியமன பரிந்துரையை திருப்பி அனுப்பிய மத்திய அரசு, கொலிஜீயம் குழு மறுபரிசீலனை செய்யுமாறு கோரியுள்ளது.
தகுதி, சீனியாரிட்டி அடிப்படையில் ஜோசப்பின் பரிந்துரை நிராகரிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து எதிர்வினையாற்றிய உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் குழு, ஒரு பரிந்துரையை மறுப்பதற்கும் மறுபரிசீலனைக்கு அனுப்புவதற்கும் மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்து மல்ஹோத்ராவின் நியமனத்திற்கு எதிராக இந்திரா ஜெய்சிங் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்து மல்ஹோத்ரா நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றாமல் நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார் இந்து மல்ஹோத்ரா. உச்சநீதிமன்றத்தில் இந்துவுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப் பிரமாணம் செய்து வைத்ததார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.