வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரன் அவர்களின் பெயர் என்றும் நினைவுகூரப்படும் – மு.க.ஸ்டாலின்
வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரன் அவர்களின் பெயர் என்றும் நினைவுகூரப்படும்.
விடுதலை போராட்ட வீரரான ஒண்டி வீரன், புலித்தேவர் படையில் படைவீரராகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர். இவர், அருந்ததியர் பிரிவைச்சார்ந்த விடுதலைப்போராட்ட வீரர் ஆவார். இந்நிலையில், இன்று அவரது 250-வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாய் விளங்கி, ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த மாவீரன் ஒண்டிவீரன் அவர்களது 250-ஆவது நினைவுநாள்! வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரன் அவர்களின் பெயர் என்றும் நினைவுகூரப்படும்.’ என்று பதிவிட்டுள்ளார்.
மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாய் விளங்கி, ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த மாவீரன் ஒண்டிவீரன் அவர்களது 250-ஆவது நினைவுநாள்!
வீரம் செறிந்த தமிழர் மரபில் ஒண்டிவீரன் அவர்களின் பெயர் என்றும் நினைவுகூரப்படும். pic.twitter.com/MeAIHF7iV3
— M.K.Stalin (@mkstalin) August 20, 2021