மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க மறுத்த சல்மான் கான்.! காரணம் இதுதானா?!

Default Image

மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கில் இருந்து நடிகர் சல்மான் கான் விலகியுள்ளார். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.திரையரங்கில் 50% இருக்கைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது மாபெரும் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மளவிகா மோகனன் நடித்திருந்தார்.

இந்த படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், மகேந்திரன், தீனா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும், அதில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கவிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி பரவி வந்தது. இதனையடுத்து, தற்போது கிடைத்த தகவலின் படி, மாஸ்டர் படத்தின் கதையை இந்திக்கு ஏற்றவகையில் மாற்றினால் மட்டுமே சல்மான் கான் நடிக்க சம்மதம் தெரிவித்து இருந்தாகவும், தற்போது அவருக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்பட்ட கதை கேட்ட சல்மான் கானுக்கு திருப்தியாக இல்லை என்பதால் இதிலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested