பிரசவத்திற்கு பின்பு வரும் தழும்புகள் மறைய என்ன செய்வது …? சில இயற்கை வழிமுறைகள் அறியலாம் வாருங்கள்!

Default Image

பெண்மையின் அடையாளமே தாய்மை தான். குழந்தைப்பேறு என்பது அனைத்து பெண்களுக்குமே ஒரு உன்னதமான நேரம். ஆனால், இந்த சமயங்களில் பெண்கள் சில பிரச்சினைகளையும் சந்திக்க வேண்டி ஏற்படுகிறது. குறிப்பாக அனைத்து பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் வயிற்று பகுதியில் தழும்புகள் ஏற்படுவது வழக்கம் தான்.

இதனை நீக்குவதற்காக நாம் செயற்கையான க்ரீம்களை வாங்கி உபயோகப்படுத்துவது நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்காது. மேலும் அது நமது உடலுக்கு ஆரோக்கியமானதும் கிடையாது. எனவே பிரசவத்திற்கு பின்பு அடிவயிற்றுப் பகுதியில் காணப்படக்கூடிய தழும்புகள் மறைவதற்கு இயற்கையாகவே வீட்டில் என்ன மருந்து முறைகளை செய்யலாம் என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

பேக்கிங் சோடா

உபயோகிக்கும் முறை : பேக்கிங் சோடாவில் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு வயிற்றில் தழும்பு உள்ள பகுதியில் இந்த கலவையை நன்கு தடவி விடவும்.

இடைப்பட்ட காலம் : இதை தடவி 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். தொடர்ந்து இதை மூன்று முதல் நான்கு வாரம் செய்து வரும் பொழுது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள்

உபயோகிக்கும் முறை : மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றை பேஸ்ட் போல கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இதை தழும்புள்ள பகுதிகளில் தடவி விடவும்.

இடைப்பட்ட காலம் : இந்த பேஸ்டை நமது வயிற்றில் தழும்பு உள்ள பகுதியில் தடவி, நன்கு உலர்ந்ததும் சாதாரண தண்ணீரால் கழுவி விடவும். இதை தினமும் செய்யலாம்.

எண்ணெய் மசாஜ்

உபயோகிக்கும் முறை : தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து நமது பிரசவ தழும்புகள் உள்ள பகுதிகளில் நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

இடைப்பட்ட காலம் : ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது நிச்சயம் இவ்வாறு நாம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது விரைவில் நமது பிரசவ தழும்புகள் நீங்குவதற்கு உதவியாக இருக்கும்.

கற்றாழை ஜெல்

Aloe Vera Gel

உபயோகிக்கும் முறை : கற்றாழையை எடுத்து அதன் தோலை உரித்து விட்டு, நடுவில் இருக்கக்கூடிய ஜெல்லை நமது பிரசவ தழும்புகள் உள்ள பகுதிகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

இடைப்பட்ட காலம் : இவ்வாறு தினமும் செய்வதன் மூலமாக நமது பிரசவ தழும்புகளை நீக்குவதற்கு உதவும். இதை தொடர்ந்து மூன்று மாதங்கள் செய்து வர வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay