‘ஒரு நாள் சிறை கைதி திட்டம்’ – கர்நாடக சிறைத்துறை அதிரடி…!

குற்றம் செய்யாதவர்கள் சிறை அனுபவத்தை பெறுவதற்காக, கர்நாடகா சிறைத்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. 

பொதுவாக குற்றம் செய்தவர்கள் தான் சிறையில் அடைக்கப்பட்டு, தண்டனை பெறுவர். ஆனால், குற்றம் செய்யாதவர்கள் சிறை அனுபவத்தை பெறுவதற்காக, கர்நாடகா சிறைத்துறை ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

அதன்படி, சிறைவாழ்வு குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக கர்நாடகா சிறைத்துறை, ‘ஒரு நாள் சிறை கைதி திட்டம்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இத்திட்டப்படி, சிறை அனுபவத்தை பெற விரும்புவோர் ரூ.500 கட்டணம்  செலுத்த வேண்டும்.

இவர்கள் ஒருநாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவர். அவர்களுக்கு, கைதி சீருடை, கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு ஆகியவை  வழங்கப்படும். குற்ற செயல்களுக்காக சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை போலவே இவர்களும் நடத்தப்படுவர்.

இத்திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது, சிறை வாழ்க்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவை  என சிறைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இத்திட்டம் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.