‘மக்கள் நீதிபதி’ நீதியரசர் கிருபாகரன் பணி ஓய்வு பெறுகிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன் – கமலஹாசன்

தமிழக நலன்களைக் காக்கும் பல்வேறு தீர்ப்புகளை அளித்த ‘மக்கள் நீதிபதி’ நீதியரசர் கிருபாகரன் பணி ஓய்வு பெறுகிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன்.
நீதிபதி கிருபாகரன் அவர்கள் 2011-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவருக்கு ஆகஸ்ட் 20-ஆம் தேதியுடன் 62 வயது நிறைவடைவதையடுத்து, இவர் இன்று ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து இவருக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிலையில், பல வழக்குகளை மிகவும் சாதூர்யமாக கையாண்ட நீதிபதி கிருபாகரன் அவர்கள் இன்று பணி ஒய்வு பெறுகிறார். இதனையடுத்து, அவருக்கு மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘தமிழக நலன்களைக் காக்கும் பல்வேறு தீர்ப்புகளை அளித்த ‘மக்கள் நீதிபதி’ நீதியரசர் கிருபாகரன் பணி ஓய்வு பெறுகிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
தமிழக நலன்களைக் காக்கும் பல்வேறு தீர்ப்புகளை அளித்த ‘மக்கள் நீதிபதி’ நீதியரசர் கிருபாகரன் பணி ஓய்வு பெறுகிறார். அவரை மனதார வாழ்த்துகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 20, 2021