அதிமுகவை பழிவாங்குவது Boomerang போல திரும்பும்…! ஹெச்.ராஜா அதிரடி…!
அதிமுகவை பழிவாங்குவது Boomerang போல திரும்பும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள் மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். அதன்பின், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் மூலம், பெரியாரியவாதிகளை கோவிலுக்குள் நுழைப்பதே திமுகவின் திட்டம் என்றும், முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சொத்தை செய்வது, முன்னாள் முதலமைச்சரை கோடநாடு விவகாரத்தில் சேர்ப்பது என இவை எல்லாமே Boomerang போல உங்களை தாக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், திமுகவின் 100 நாள் ஆட்சி, மிகப்பெரிய தோல்வி என்றும், மக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.