#Breaking:அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு – உயர்நீதிமன்றம் கண்டனம்..!
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை ஒத்தி வைக்க கோரியதால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு போடப்பட்டது. இதனையடுத்து,முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.அதில்,தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை,சென்னை உயர்நீதிமன்றம் விதிமுறைகளை பின்பற்றாமல் விசாரிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும்,இந்த வழக்கில் முன்னதாக நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில்,வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,ஒத்தி வைக்க கோரியதால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததை குறிப்பிட்டு,ராஜேந்திர பாலாஜி அவர்கள் விசாரணையை ஒத்தி வைக்க கோரியதற்கு,நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்,வழக்கு இன்னும் எண் இடப்படும் நடைமுறையே முடியவில்லை என லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.