நீதிமன்ற தீர்ப்பு;மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு எம்.பி கனிமொழி நன்றி…!

மாநில அரசு அனுப்பும் விண்ணப்பத்தில் உள்ள மொழிகளிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ள தீர்ப்பை வரவேற்று மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு எம்.பி கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக எம்.பிக்களின் கடிதங்களுக்கு இந்தியில் மத்திய அமைச்சர்கள் பதில் அளிக்கிற சட்ட விரோதமான நடைமுறை நிறுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,”ஒரு மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்”, என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த வழக்கில்,”இந்திய அலுவல் மொழிச்சட்டத்தை மத்திய அரசு, அதன் அலுவலர்கள் பின்பற்ற வேண்டும்.செய்தியாக இருந்தாலும் விளக்கமாக இருந்தாலும் அதனை தாய்மொழியில் புரிந்துகொள்ளும் போதுதான் முழுமடைகிறது” என நீதிபதி கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில்,இந்த தீர்ப்பை வரவேற்று மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு எம்.பி கனிமொழி நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசுக்கு ஆங்கிலத்தில் எழுதும் கடிதங்களுக்கு ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும்.இந்தியில் பதில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி”,என்று பதிவிட்டுள்ளார்.
உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தோழர் @SuVe4Madurai அவர்களுக்கு நன்றி. (2/2)
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 19, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025