தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி முதல் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் தமிழ்நாட்டில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 21ஆம் தேதி முதல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 21ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், நாகை, கிருஷ்ணகிரி, அரியலூர், தர்மபுரி, சேலம், கோவை, நீலகிரி, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.