தங்கம் விலை சரிவு.! சவரனுக்கு ரூ.120 குறைவு.!!
சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.35,592 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் தான் உள்ளது. பெண்கள் அதிகமானோர் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பலரும் உற்று கவனிப்பதுண்டு. அந்த வகையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வந்தது. இன்று சற்று குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.35,592 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,449 க்கும் ஒரு சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.40 க்கு விற்பனையாகிறது.