கேரளாவில் புதிதாக 21,427 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.
கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 21,427 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கேரளாவில் 179 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் அம்மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,049 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 18,731 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,48,196 பேர் வீடு திரும்பியுள்ளனர்.