சிறப்பு முகாம்களை மூடி அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் – சீமான்

Default Image

சிறப்பு முகாம்களை மூடி அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலைசெய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி சீமான் ட்விட்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில், கைதிகளுக்கான சிறப்பு முகாம் ஒன்று உள்ளது. அங்கு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் உட்பட 120 உள்ளனர். இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த அகதிகள் உள்ளனர். இந்த சிறப்பு முகாமில் சுமார் 80 இலங்கை தமிழர்கள்  அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் தங்களை விடுதலை செய்யுமாறு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையில், ரமணன் என்பவர் வயிற்றை கத்தியால் கீறியும், நிப்சன் என்பவர் கழுத்தை அறுத்தும், மற்றும் சிலர் தூக்க மாத்திரை சாப்பிட்டும், மரத்தின் மீது எறியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, இதுதொடர்பாக 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,

சிறப்பு முகாம் எனும் பெயரில் வதைக்கூடங்களில் அடைக்கப்பட்டு, கொடுந்துயருக்கு ஆளான தங்களை விடுதலை செய்யக்கோரி 15 நாட்களுக்கும் மேலாக பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்த திருச்சி முகாமிலுள்ள ஈழச்சொந்தங்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செய்தியறிந்து பதற்றமும், பெரும் மனவேதனையுமடைந்தேன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்