முன்னாள் அதிபருடன் தாலிபான்கள் பேச்சு வார்த்தை..!

Default Image

புதிய அரசை அமைப்பதற்காக ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபருடன் தாலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து நிலையில், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால், உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்தன.

மேலும், இன்று ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாயை,  தாலிபான்களின் தளபதியும் ஹக்கானி பயங்கரவாத குழுவின் மூத்த தலைவருமான அனஸ் ஹக்கானி சந்தித்து அங்கு புதிய அரசு அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

தற்போது ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அமைப்பது குறித்த பேச்சு வார்த்தை நடக்கிறது. இந்நிலையில் தாலிபான்களின் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவமாக கருதப்படுகிறது. மேலும், இந்த பேச்சுவார்த்தையின் போது ஆப்கானிஸ்தான் அரசின் முன்னாள் அமைதிக்கான தூதர் அப்துல்லா அப்துல்லாவையும் சந்தித்து பேசியிருப்பதாக தலிபான் அலுவலர்  கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்