சிக்கிம், நாகாலாந்து, திரிபுராவுக்கு காங்கிரஸ் பொறுப்பாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு!
சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுராவின் காங்கிரஸ் பொறுப்பாளரை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுராவின் காங்கிரஸ் பொறுப்பாளராக அஜோய் குமாரை நியமனம் செய்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். அஜோய் குமார் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். 15 வது மக்களவையில், ஜாம்ஷெட்பூர் மக்களவைத் தொகுதியின் எம்.பி. அவர் இந்திய தேசிய காங்கிரசின் தேசிய செய்தி தொடர்பாளர். அவர் ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும் இருந்தார்.
1986-1996ம் ஆண்டுகளில் அஜோய் குமார் ஜாம்ஷெட்பூரில் ஐபிஎஸ் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். 1994 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை நகர எஸ்பியாக இருந்தார். அந்த நேரத்தில் அவர் ஊடகங்களால் என்கவுன்டர் நிபுணர் என்று அழைக்கப்பட்டார் என கூறப்படுகிறது. இடைக்காலத் தேர்தலில் ஜாம்ஷெட்பூர் 15வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2014ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். பின்னர் அதே வருடம் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். 2017ம் ஆண்டு (JPCC) காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த அஜோய் குமார், 2020ல் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்.
இந்த நிலையில், தற்போது சிக்கிம், நாகாலாந்து மற்றும் திரிபுராவின் காங்கிரஸ் பொறுப்பாளராக அஜோய் குமாரை நியமனம் செய்து, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hon’ble Congress President Smt. Sonia Gandhi has appointed Dr. Ajoy Kumar as AICC In-Charge of Sikkim, Nagaland and Tripura with immediate effect. pic.twitter.com/BH9hFdKEBy
— Congress (@INCIndia) August 18, 2021