ஆப்கான் விவகாரம் – மத்திய அரசு முக்கிய ஆலோசனை!!

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு ஆலோசனை நடத்த உள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்பது மற்றும் அந்நாட்டு நிலவரம் தொடர்பாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று ஆலோசனை நடத்த உள்ளது. ஆப்கானிஸ்தானில் மேலும் 1,500 இந்தியர்கள் சிக்கியுள்ளதாக வெளியுறவுதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். ஏர் இந்தியா விமானம் அல்லது விமானப்படை விமானங்கள் மூலம் ஆப்கானில் சிக்கியுள்ளவர்களை மீட்க திட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, பிரதமர் மோடி தலையில் நேற்று இரவு முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிலைமையை பொறுத்து இன்று அடுத்தகட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஏர் இந்தியா விமானம் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் 249 பேர் தாயகம் அழைத்துவரப்பட்டன.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025