வாத்தியாரே 5 மணிக்கு டிக்கிலோனா அப்டேட்.! தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.!
டிக்கிலோனா திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் “டிக்கிலோனா”. இந்த திரைப்படத்தில், சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் . இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் பாடல்கள் என அனைத்தும் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக இந்த திரைப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி விநாயகர்சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வந்தது.
இந்த நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோ ட்வீட்டர் பக்கத்தில் வாத்தியாரே 5 மணிக்கு டிக்கிலோனா அப்டேட் வருது என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரிலீஸ் தேதியாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Vaathiyaare, evening 5 manikku #DikkiloonaUpdate varudhu. Ready-ah Irunga ????#Dikkiloona@iamsanthanam @thisisysr @karthikyogitw @SoldiersFactory @sinish_s @AnaghaOfficial @KanchwalaShirin @iYogiBabu @twitavvi @J0min @Dineshsubbaray1 @keerthivasanA @Arunrajakamaraj pic.twitter.com/ThFvVT3XTR
— KJR Studios (@kjr_studios) August 18, 2021