#BREAKING: முதன்முறையாக சென்செஸ் 56 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சம்!
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செஸ் முதன் முறையாக 56 ஆயிரம் புள்ளிகளை தாண்டி புதிய உச்சத்தை பெற்றுள்ளது.
இந்திய பங்குச்சந்தை வர்த்தக தொடக்கத்தில் சென்செஸ் குறியீட்டு எண் 260.95 புள்ளிகள் அதிகரித்து, 56,053.22 வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 70.50புள்ளிகள் அதிகரித்து, 16,685.10 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இந்திய பங்குச்சந்தை இதுவரை கண்டிராத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.