என்னது…மு.க.அழகிரி பாஜகவில் இணைகிறாரா? – முன்னாள் மத்திய அமைச்சரின் கருத்தால் பரபரப்பு..!
மு.க. அழகிரி அவர்களும் பாஜகவில் இணையும் நாளை உருவாக்கி காட்டுவோம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து அரசியலில் பரபரப்bjpபை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் தலைமையில் மக்கள் ஆசி யாத்திரை கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில்,மக்கள் ஆசி யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,முன்னாள் மத்திய அமைச்சர் சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சிபி ராதாகிருஷ்ணன்:”தமிழகத்தில் தாமரை மலர போகும் நாள் உருவாகப் போகிறது.ஏனெனில்,முன்னதாக திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த அண்ணன் வி.பி.துரைசாமி,முன்னாள் திமுக எம்பி ராமலிங்கம் ஆகியோர் பாஜகவிற்கு வந்துள்ளனர்.நாம் ஒரு நாளை உருவாக்கப் போகிறோம். விரைவில் மதுரையிலிருந்து அண்ணன் அழகிரி அவர்களும் பாஜகவில் இணையும் நாளை நாம் உருவாக்கி காட்டுவோம். இன்று நான்கு இடங்களைப் பெற்றுள்ள நாம் வருங்காலத்தில் 140 இடங்களை பெறுவோம்”, என்றார்.