வறண்ட உதட்டால் அவதிப்படுகிறீர்களா ….? இயற்கை வழிமுறைகள் சில அறியலாம் வாருங்கள்!
காய்ந்த அல்லது வறட்சியான உதடுகள் இருப்பவர்கள் முக அழகு உதட்டின் மூலமாகவே பாதிக்கப்படும். உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டு இருப்பது, முக அழகை பாதிப்பது மட்டுமல்லாமல் அதிகப்படியான வலியை ஏற்படுத்தும். இந்த உதடு வெடிப்புக்கு காரணம், வறண்ட உதடுகள் தான்.
எனவே இந்த வறண்ட உதடுகளை மாற்றுவதற்கு செயற்கையான கிரீம்களை பயன்படுத்துவது சில நாட்களுக்கு மட்டுமே பலன் தரும். ஆனால் இயற்கை முறையில் வறண்ட உதடுகளை நிரந்தரமாக மென்மையான சிவப்பழகு உள்ள உதடாக மாற்றுவதற்கான சில வழிமுறைகளை நாம் அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
மஞ்சள்
நன்மைகள் : மஞ்சளை நமது உதட்டில் பயன்படுத்துவது வறண்ட உதடுகளை மாற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது.
உபயோகிக்கும் முறை : கால் டீஸ்பூன் பாலில், 2 சிட்டிகை மஞ்சள் அல்லது பச்சை மஞ்சள் சிறிதளவு உரசி சேர்த்துக் கொள்ளவும். இரவு தூங்குவதற்கு முன்பாக தொடர்ந்து உபயோகித்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
பாதாம் எண்ணெய்
நன்மைகள் : இரவு தூங்குவதற்கு முன்பாக உதடுகளில் பாதாம் எண்ணெய் தடவுவது வறண்ட உதடுகளை சீர்படுத்த உதவுகிறது.
உபயோகிக்கும் முறை : இரவு தூங்குவதற்கு முன்பு லேசான வெது வெதுப்பான தண்ணீரில் உதடுகளை நனைத்துக் கொள்ளவும். பின்பு பாதாம் எண்ணெய்யை தடவி விட்டு உறங்கச் செல்லவும்.
தேங்காய் எண்ணெய்
நன்மைகள் : தேங்காய் எண்ணெயை உதடுகளில் தடவுவதன் மூலம் உதடுகளில் காணப்படக்கூடிய வெடிப்புகள் நீக்குவதற்கு பெரிதும் உதவுகிறது.
உபயோகிக்கும் முறை : தினமும் தேங்காய் எண்ணையை இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்துவது உதடுகளை மென்மையாக்க உதவும்.
தேன் மற்றும் சர்க்கரை
நன்மைகள் : தேனை நமது உதடுகளில் பயன்படுத்தும் பொழுது வறண்ட உதடுகள் மாறி மென்மையான சிகப்பழகான உதடுகள் பெறுவதற்கு பெரிதும் உதவுகிறது.
உபயோகிக்கும் முறை : சிறிதளவு தேன் மற்றும் சர்க்கரையை நன்றாக கலந்து உதடுகளில் ஸ்கிரப் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்யும் பொழுது உதடுகளில் உள்ள இறந்த சர்மங்கள் அகற்றப்பட்டு மென்மையான உதடுகள் பெற உதவும்.