இந்திய சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் மறைந்த தினம் இன்று….!

Default Image

இளைஞர்களே உங்களது ரத்தத்தை கொடுங்கள்; நான் உங்களுக்கு சுதந்திரத்தை தருகிறேன் என்று அனல் பறக்க பேசிய வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மறைந்த தினம் வரலாற்றில் இன்று.

1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் பிறந்த புரட்சி வீரர் தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அதிக அளவு ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்ட இவர், தனக்கு சரியான குரு கிடைக்காததால் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அங்கும் சில பிரச்சினை காரணமாக கல்லூரியை விட்டு நீக்கப்பட்டார். பின் எஸ்.ஆர்.தாஸ் உதவியுடன் மற்றொரு கல்லூரியில் சேர்ந்து ஐசிஎஸ் பட்டம் பெற்று, லண்டனில் வேலை பார்த்து வந்துள்ளார்.

ஆனால், நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் நாம் வேலை பார்க்கக் கூடாது எனும் எண்ணத்தில் லண்டனில் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்பு 1941 ஆம் ஆண்டு சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை உருவாக்கி ஆசாத் ஹிந்த் எனும் ரேடியோ மையத்தை நிறுவி நாட்டுக்கு எனத் தனிக் கொடி ஒன்றை அமைத்து, ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

அதன் பின் பல இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி பெண்களுக்கென தனிப் பிரிவை ஏற்படுத்தி, அதற்கு ஜான்சிராணி படை எனப் பெயரிட்டு, பலராலும் பாராட்டப்பட கூடிய ஒரு விடுதலைப் போராட்ட வீரராக இருந்துள்ளார். அதன் பின்னதாக 1941 ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி இரவு முதல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இவர் மாறுவேடத்தில் தப்பிச் சென்றார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி சுபாஷ் சந்திர போஸ் மறைந்தார். பின் 1992 ஆம் ஆண்டு சுபாஷ் சந்திர போஸுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்கள் சரியாக சமர்ப்பிக்கப்படாத காரணத்தால் உச்சநீதிமன்ற ஆணையின்படி இந்த பாரத ரத்னா விருது திரும்ப பெறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்