குழந்தைகள் போல விளையாடி மகிழ்ந்த தலிபான்கள்… அதிபர் மாளிகையில் உற்சாக நடனம்!! வீடியோ உள்ளே!

Default Image

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து, தலிபான்கள் உற்சாகமாக குழந்தைகள் போல் விளையாடிய வரும் காட்சி இணையத்தில் வைரல்.

ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி இருந்த நிலையில், நேற்று தலைநகர் காபூலை சுற்றி வளைத்த தலிபான்கள், ஆட்சியைக் கைப்பற்றினர். இதனால் ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் துணை அதிபர்கள் நாட்டை விட்டு வெளியேறி, தஜகஸ்தானுக்கு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

அதிபர் மாளிகையை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதே சமயத்தில், இடைக்கால ஆப்கன் அதிபராக தலிபான்களின் அரசியல் பிரிவின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதார் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆஃப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களுக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு கரம் நீட்டியுள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து, தலிபான்கள் அங்குள்ள பொழுதுபோக்கு பூங்காக்களில் உற்சாகமாக குழந்தைகள் போல் விளையாடிய காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆப்கானில் அனைத்து இடங்களிலும் தலிபான்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.

தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அங்குள்ள பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்று விளையாடினர். சிறுவர்கள் விளையாடும் குதிரி ராட்டினம், விளையாட்டு காருகளை ஓட்டி மகிழ்ந்தனர். இதுவரை ஆயுதங்களுடன் இருந்தவர்கள் தற்போது குழந்தைகளாக மாறி விளையாடி வருகின்றனர். மேலும், உடற் பயிற்சி கூடங்களுக்கு சென்று தலிபான்கள் பயிற்சி செய்து வருகின்றனர்.

இதுபோன்று, ஆப்கனில் ஆட்சியைக் கைப்பற்றியதை, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அதிபர் மாளிகையில் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை தனது வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்து கொண்டிருக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்