#Breaking:”நாங்கள் இதற்குதான் விலக்கு கேட்டோம்” – நடிகர் சூர்யா தரப்பு விளக்கம்..!

Default Image

வருமான வரியில் வட்டிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து மட்டுமே  விலக்கு கேட்டதாக நடிகர் சூர்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவிடம் 2007-2008, 2008-2009 நிதி ஆண்டுக்கான வருமான வரி ரூ.3.11 கோடி செலுத்த வருமான வரித்துறை முன்னதாக உத்தரவு பிறப்பித்தது.ஆனால்,3 வருடங்களுக்கு பிறகு வருமான வரி கணக்கிட்டு வசூலிக்கப்பட்டதால் வட்டியை வசூலிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூர்யா வழக்கு தொடர்ந்தார்.

இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,வருமான வரிக்கு வட்டி கட்டுவதில் விலக்கு கேட்ட நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.முன்னதாக, வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தராததால்,மனுவை தள்ளுபடி செய்ய வருமான வரித்துறை வாதம் செய்த நிலையில்,நடிகர் சூர்யாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில்,வட்டிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து மட்டுமே விலக்கு கேட்டதாக நடிகர் சூர்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், உயர்நீதின்ற தீர்ப்பின் நகல் கிடைத்ததும் உடனடியாக மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் நடிகர் சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்