ஐசிசி அதிர்ச்சி முடிவு!இனி சாம்பியன்ஸ் டிராபி போட்டி கிடையாதாம்!அதற்கு பதில் உலக்கோப்பை டி20 போட்டி!

Default Image

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி)  2021-ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டி, உலக்கோப்பை டி20 போட்டியாக நடத்தப்படும் என்று நேற்று  அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 5 நாள் நிர்வாகக்குழு கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது. இந்தக் கூட்டத்தின் நிறைவு நாளான இன்று ஐசிசிதலைமை நிர்வாக அதிகாரி டேவ் ரிச்சார்ட்சன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:”இந்தியாவில் 2021-ம் ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் போட்டித் தொடருக்கு பதிலாக டி20 உலகக்கோப்பை போட்டியாக நடத்தப்பட உள்ளது. இதற்கு இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் ஒப்புதல் அளித்துவிட்டனர்.

சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் 8 அணிகள் மட்டுமே மோதும், ஆனால், டி20 உலகக்கோப்பை போட்டியில் 16 அணிகள் போட்டியிடும். இந்த மாற்றத்துக்கு பிசிசிஐ பிரதிநிதி அமிதாப் சவுத்ரியும் ஒப்புதல் அளித்துவிட்டார்.

இதன் மூலம் இரு ஐசிசி உலக டி20 போட்டிகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெறும். அதாவது 2020-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை போட்டி நடக்கும். 2021-ம் ஆண்டில் இந்தியாவில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு பதிலாக டி20 உலகக்கோப்பை போட்டியாக நடக்கும்.

டி20 போட்டிகள் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது, மக்கள் மத்தியில் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளைப் பெற்று வருவதால், இந்த மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே 2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடக்கிறது. 2023-ம் ஆண்டிலும் நடக்கிறது. 50 ஓவர்கள் கொண்ட சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்துவதை பெரும்பாலான நாடுகளின் உறுப்பினர்கள் விரும்பவில்லை. இதையடுத்து நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் அந்த போட்டித் தொடர் நீக்கப்பட்டது. கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கேற்ப இதுபோன்ற மாற்றங்கள் வருவது இயற்கைதான்.

ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையும், சாம்பியன்ஸ் டிராபி போட்டியும் ஏறக்குறைய ஒரேமாதிரியானதுதான். பின்பு ஏன் அப்படிப்பட்ட ஒரேமாதிரியான போட்டியை நடத்த வேண்டும். இந்த இருபோட்டிகளையும் வேறுபடுத்திக் காட்டுவதும் கடினமானதாக இருக்கிறது.

அதேபோலவே 2020-ம் ஆண்டில் நடக்கும் டி20 உலகக்கோப்பையும், 2021-ம் ஆண்டில் நடக்கும் டி20 உலகக்கோப்பையும் வேறுபடுத்திக் காட்டுவது கடினம்தான். ஆனால்,எதிர்காலத்தில் 2ஆண்டுகளுக்கு ஒருமுறை டி20 உலகக்கோப்பை போட்டியும், 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை 50 ஓவர்களுக்கான உலகக்கோப்பை போட்டியும் நடத்தும்வகையில் மாற்றப்படும்”.இவ்வாறு ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்