#Breaking:”சமூக நீதியை பாழ்படுத்த விஷம பிரச்சாரம்” – முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

Default Image

அர்ச்சகர்கள் நியமனத்தில் சமூக நீதியை பாழ்படுத்த தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநில பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து,இன்று கூடி இருக்கும் சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான இரண்டாம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது.அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று பதில் அளிக்கின்றனர்.

இந்நிலையில்,அர்ச்சர்கர்கள் நியமனத்தில் சமூக நீதியை பாழ்படுத்த சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:

“சமூக நீதியை பாழ்படுத்த சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்கள் பரப்புகின்றனர்.அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது.தமிழக கோயில்களில் ஏற்கனவே பணியில் உள்ள யாரும் நீக்கப்படவில்லை.மேலும்,அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தால் ஏற்கனவே பணியிலிருந்த அர்ச்சகர்களுக்கு பாதிப்பு இல்லை.சமூக நீதியை பாழ்படுத்த விஷம பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது”,என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்