IPL 2018:சென்னை -பெங்களூரு போட்டி :ஒரே போட்டியில் பல சாதனைகள்!தோனி,விராட் கோலி சாதனையில் டாப்!

Default Image

 சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான ,நேற்று முன்தினம் பெங்களூரு நகரில்  நடந்த ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில்,  பல்வேறு சுவராஸ்யமான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளன.

Image result for dhoni & virat ipl 2018

பெங்களூரு நகரில் ஐபிஎல் போட்டியில் 24-வது லீக் ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது. 206 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Image result for dhoni & virat ipl 2018

அதிரடியாக விளையாடிய ராயுடு 52 பந்துகளில் 82 ரன்களும், கேப்டன் தோனி 34 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். இந்தப் போட்டி குறித்த சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ.

Image result for dhoni & virat ipl 2018

1. டி20 கிரிக்கெட் போட்டியில் கேப்டன் பொறுப்பு ஏற்ற விராட் கோலிக்கு நேற்று 100-வது போட்டியாகும். இதையடுத்து 100 போட்டிகளுக்கும் மேல் கேப்டன் பதவி வகித்த 3-வது வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். இதற்கு முன் தோனி (245), கம்பீர் (170) போட்டிகளில் கேப்டனாகப் பணியாற்றியுள்ளனர்.

2. பெங்களூரு சின்னச்சாமி அரங்கில் நடந்த போட்டிகளில் மட்டும் விராட் கோலி விளையாடி நேற்றைய போட்டியின் மூலம் 2,000 ரன்கள் சேர்த்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் ஒருவர் 2,000 ரன்கள் சேர்ப்பது இதுதான் முதல் முறையாகும்.

3. டி20 போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் நேற்றைய போட்டியில் 100-வது விக்கெட்டை வீழ்த்தினார்.

4. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஐபிஎல் போட்டிகளில் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைப்பது நேற்றுடன் 4-வது முறையாகும்.

5. இதற்கு முன் 2008-ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக முரளிகார்த்திக் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து தோனி அணியை வெற்றி பெறவைத்தார்.

6. 2-வதாக 2010-ம் ஆண்டு தர்மசாலாவில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இர்பான் பதான் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தார் தோனி.

7. 3-வதாக 2016-ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அக்சர் படேல் பந்துவீச்சில் தோனி சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றார். இந்தமுறை புனே அணியில் தோனி இருந்தார்

8. டி20 கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக 5 ஆயிரம் ரன்களை நேற்றைய போட்டியில் மூலம் தோனி கடந்தார். கவுதம் கம்பீர் (4,242ரன்கள்) 2-வது இடத்திலும் விராட் கோலி (3591) 3-வது இடத்திலும் உள்ளனர்.

9. பெங்களூரில் நேற்று நடந்த பெங்களூரு, சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. ஐபிஎல் வராலாற்றில் ஒரே போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும்.

10. ஐபிஎல் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட ஸ்கோரை வெற்றிகரமாக சென்னை சூப்பர் கிங்ஸ் சேஸிங் செய்தது இது 3-வது முறையாகும்.

11. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் அதாவது பெங்களூரு சின்னச்சாமி அரங்கில் நேற்றுடன் 32-வது முறையாக தோல்வி அடைந்தது. இதற்கு முன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி டெல்லி பெரஷோ கோட்லா மைதானத்தில் 33 முறை தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

12. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் இம்ரான் தாஹிர் பந்தில் 111 மீட்டர் உயரத்துக்கு சிக்ஸர் அடித்ததில்  பந்து காணாமல் போனது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்