சுட்டெரிக்கும் நயன்தாராவின் “நெற்றிக்கண்”.! திரைவிமர்சனம் இதோ!

Default Image

இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 13 – ஆம் தேதி ஓடிடியில் வெளியான திரைப்படம் நெற்றிக்கண். இப்படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

இளம்பெண்களை கடத்தி கொல்லும் ஒரு சைக்கோ கொலையாளி, கண்தெரியாத வேலையிழந்த சிபிஐ அதிகாரி நயன்தாரா அந்த சைக்கோ கொலையாளியை கண்டுபிடித்தார்? என்பதே கதைக்களம். எப்படியும் கண்டுபிடித்துவிடுவார் அதனை எப்படி செய்கிறார் என சற்றே யூகிக்க கூடிய திரைக்கதையில் கூறியிருக்கிறார்

நயன்தாரா ஆரம்பத்தில் சிபிஐ அதிகாரியாக அறிமுமாகமாகிறார், ஒரு விபத்தில் கண்பார்வையை இழக்கிறார். அதில் தனது தம்பியையும் இழக்கிறார். அதே நேரத்தில் ஒரு சைக்கோ கொலைகாரன் இளம்பெண்களை அவர்கள் செய்யும் தவறின் மூலம் அவர்களை பிளாக் மெயில் செய்து அவர்களை கடத்தி சித்ரவதை செய்கிறான். அப்படி கடத்தல் சம்பவத்தின் போது , நயன்தாராவை சந்திக்கிறான் அதன் பின்னர் கதைக்களம் விறுவிறுவென நகர்கிறது.

netrikann 3

கண்தெரியாத மாற்றுத்திறனாளி பெண்ணாக நயன்தாரா அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். தனது அனுபவமிக்க நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி யிருக்கிறார். சைக்கோ வில்லனாக அஜ்மல் மிரட்டியுள்ளார். இளம்பெண்களை சித்தரவதை செய்யும் காட்சிகளில் பார்வையாளர்களை பதறவைத்துள்ளார்.

போலீஸ் அதிகாரியாக நயன்தாராவுடன் பயணிக்கும் மணிகண்டன் தனது ;சீன்’னான நடிப்பை அசால்டாக வெளிப்படுத்தியுள்ளார். படம் பார்த்த பின்பும் மணிகண்டன் கதாபாத்திரம் பார்வையாளர்களின் மனதில் நிற்கிறது. டெலிவரி பாயாக முதலில் நயன்தாராவை பிடிக்காமலும்,அடுத்து அவரின் சூழ்நிலையை கண்டு உதவும் சரண் சக்தியும் பார்வையாளர்களை கவர்கிறார்.

முக்கியமாக கண்ணாவாக வரும் நயன்தாராவின் நாய் ஒரு காட்சியில் வில்லனுடன் மோதி நயன்தாராவுக்காக உயிரைவிடும் இடத்தில் நம்மையும் சோகத்தில் ஆழ்த்துகிறது. குறைவான கதாபாத்திரங்களே என்றாலும் கதைக்களத்தில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ததால் படம் பார்த்தவர்கள் மனதில் அனைத்து கதாபாத்திரமும் நிற்கிறது.

கண்தெரியாத ,மாற்றுத்திறனாளி பெண்ணான நயன்தாரா சைக்கோ கொலைகாரனை எப்படி பிடித்தார், கொலைகாரனிடம் இருந்து எப்படி தன்னை காப்பாற்றினார், கடத்திய பெண்கள் இறுதியில் உயிருடன் மீட்கப்பட்டனரா? எளிதாக கணிக்கக்கூடிய காட்சியமைப்புகள், எதிர்பார்த்த டிவிஸ்ட் என படத்தில் புதுமையான முயற்சிகள் குறைவாகவே தென்படுகின்றன. இருந்தாலும், படத்தின் மேக்கிங், நயத்தரவின் நடிப்பு, அஜ்மலில் வில்லத்தனம், மணிகண்டனின் வெகுளித்தனம் என படம் பார்ப்பவர்களை நெற்றிக்கண் கவர்ந்துவிட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்