#BREAKING: காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு – பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு!!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு!!
ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் விமான நிலையத்தில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் அமெரிக்க பாதுகாப்பு படையினர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஆட்சியை தலிபான் அமைப்பினர் கைப்பற்றிய நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஏராளமானோர் மக்கள் குவிந்ததால், கூட்டத்தை கலைக்க துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக அரசு படைக்களுக்கு, தலிபான் பயங்கரவாத படைகளுக்கு நீடித்து வந்த போர், ஆட்சியை கையப்பற்றிய பின் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்திருந்தனர்.
அந்நாடு முழுவதும் நேற்று தலிபான் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு சார்பில் ஏர் இந்தியா விமானம் மூலம் 120 இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டன.
இன்றும் அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்காக, ஆப்கானிஸ்தான் செல்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டிருந்த நிலையில், காபூல் விமான நிலையம் மூடப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் அங்கு செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டது.