முட்டை விலை திடீர் உயர்வு.!

நாமக்கல் மண்டலத்தில் நேற்றைய முட்டை கொள்முதல் விலை ரூ.4.20 லிருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ.4.30 ஆக விலை நிர்ணயம்.
கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து முட்டை விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது.
இந்நிலையில், நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலையை உயர்த்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்றைய முட்டை கொள்முதல் விலை ரூ.4.20- லிருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ.4.30 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 12-ஆம் தேதயிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் ரூ.4.20 ஆக விற்பனை செய்யப்பட்ட வந்த நிலையில், இன்று முட்டை விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025