ஜெர்மனி கால்பந்து ஜாம்பவான் ஜெர்ட் முல்லர் காலமானார்…!

Default Image

ஜெர்மனி கால்பந்து ஜாம்பவான் ஜெர்ட் முல்லர் தனது 75 வயதில் காலமானார்.

ஜெர்மனியை சேர்ந்த கால்பந்து ஜாம்பவானான ஜெர்ட் முல்லர் இன்று தனது 75 வயதில் காலமானார்.இதனையடுத்து,அவரது மரணத்திற்கு ஜெர்மனி கால்பந்து ரசிகர்கள்,கால்பந்து நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில்,பேயர்ன் முனிச் கால்பந்து கிளப்பின் தலைவரான ஹெர்பர்ட் ஹைனர்: “எஃப்.சி பேயர்ன் மற்றும் அதன் அனைத்து ரசிகர்களுக்கும் இன்று ஒரு சோகமான, இருண்ட நாள். ஜெர்ட் முல்லர் இதுவரை இருந்த மிகச்சிறந்த ஸ்ட்ரைக்கராக இருந்தார், மேலும் உலக கால்பந்தின் சிறந்த குணாதிசயம் கொண்ட நபர். நாம் அனைவரும் அவரது மனைவிக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வோம். ஜெர்ட் முல்லர் இல்லாமல்,இனி நாம் அனைவரும் விரும்பும் கிளப்பாக FC பேயர்ன் இருக்காது. அவருடைய பெயரும் நினைவும் என்றென்றும் வாழும். ” என்று தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து,எஃப்சி பார்சிலோனா நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”கால்பந்து வரலாற்றில் மிகச்சிறந்த நபர்களில் ஒருவரான ஜெர்ட் முல்லரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களின் மிகவும் ஆழ்ந்த அனுதாபங்கள்”,என்று தெரிவித்துள்ளது.

பேயர்ன் மற்றும் ஜெர்மனி தேசிய அணிக்காக ஜெர்ட் முல்லர் விளையாடி வரலாறு படைத்தார்.ஏனெனில்,பேயர்ன் முனிச் அணிக்காக 607 போட்டிகளில் கலந்து கொண்டு 566 கோல்களை அடித்தார்.குறிப்பாக 365 புள்ளிகளுடன் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை தற்போது வரைப் பெற்றுள்ளார். அத்துடன் ஏழு முறை முதலிடம் பிடித்தார். அவர் தேசிய அணிக்காக 62 போட்டிகளில் 68 கோல்களைப் பெற்றார்.1970 ஆம் ஆண்டு ஃபிஃபாவில் மேற்கு ஜெர்மனிக்கான பத்து கோல்களை அடித்து உலகக் கோப்பை கோல்டன் பூட்டை அதிக கோல் அடித்த வீரராகப் பெற்றார்.1982 க்கு பிறகு இவர் கால்பந்து விளையாட்டில் இருந்து ஒய்வு பெற்றார்.இதனையடுத்து,2015 அன்று, முல்லர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்