லிங்குசாமி படத்தில் இணைந்த சூர்யா பட நடிகர்.!
லிங்கு சாமி இயக்கும் அடுத்த படத்தில் சிராக் ஜானி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் ரன், சண்டக்கோழி, பையா, அஞ்சான் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியும் , தயாரித்தும் வந்த லிங்குசாமி கடைசியாக சண்டைக்கோழி-2 படத்தினை இயக்கியிருந்தார். அதன் பின் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை.
இந்த நிலையில், இயக்குனர் லிங்குசாமி அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகரான ராம் பொதினேனி நடிக்க உள்ளார் என்றும், இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கவுள்ள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாவும், ராம் பொதினேனிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் சிராக் ஜானி இணைந்துள்ளதாக லிங்கு சாமி அறிவித்துள்ளார். இவர் இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.