இனிதே நிறைவு..இன்றே அப்டேட்.! அசுர வேகத்தில் சியான் 60.!
சியான் 60 படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் இணைந்து நடித்து வந்த திரைப்படம் சியான் 60. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்போது அணைத்து படப்பிடிப்பு முடிந்துள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்டர் பக்கத்தில் இன்று காலை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில்ம் இதனையடுத்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சியான் 60 படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
#CHIYAAN60 – UPDATE TODAY AT 6PM ????#Chiyaan60UpdateAt6PM#ChiyaanVikram #DhruvVikram @karthiksubbaraj @Lalit_SevenScr @Music_Santhosh @kshreyaas @proyuvraaj pic.twitter.com/0quKxtfjX4
— Seven Screen Studio (@7screenstudio) August 15, 2021