இனி ஆகஸ்ட் 14 ஆம் தேதி “பிரிவினை கொடுமைகள் நினைவு தினம்”- மத்திய அரசு அறிவிப்பு..!

Default Image

ஆகஸ்ட் 14 ஆம் தேதியை “பிரிவினை கொடுமைகள்(பார்ட்டர் ஹாரர்ஸ்) நினைவு தினமாக” மத்திய அரசு அறிவித்துள்ளது.

1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்து சென்றது.இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது.ஆனால்,மத வாரியாக நாடு பிரிந்த பின்னர்,நாட்டின் பல பகுதிகளில் மிகப்பெரிய கலவரங்களும்,போராட்டங்களும் வெடித்தது.

குறிப்பாக,வங்காளம், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய வன்முறைகள் வெடித்தன.இந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.மேலும்,பலபேர் தங்களது உறவுகள்,உடமைகளை இழந்தனர்.பலர் இடம் பெயர்ந்தனர். இதனால்,பாகிஸ்தான் பிரிவினையால் ஏற்பட்ட கலவரம் மக்களிடையே இன்றளவும் ஆறாத துயரமாக உள்ளது.

மேலும்,இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”பிரிவினையினால் ஏற்பட்ட வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது.ஏனெனில்,வன்முறையால் பல லட்சக்கணக்கான எங்கள் சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இடம்பெயர்ந்தனர், தங்கள் உயிர்களை இழந்தனர்.

எனவே,நமது மக்களின் போராட்டங்கள், தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14- ம் தேதி, பிரிவினை கொடுமைகள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும்”,என்று தெரிவித்தார்.

இந்நிலையில்,இந்திய அரசாங்கம் தற்போதைய மற்றும் வருங்கால தலைமுறையினர், பிரிவினையின்போது இந்திய மக்கள் சந்தித்த வேதனைகள் மற்றும் துன்பங்களை நினைவூட்டுவதற்காக ஆகஸ்ட் 14 -ஐ கொடுமைகள்(பார்ட்டர் ஹாரர்ஸ்) நினைவு தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்