“பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்” – மநீம தலைவர் கமல்ஹாசன்..!

Default Image

பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம் என்று கூறி நாட்டின் 75 வது சுதந்திர தினத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சுதந்திர தின நாள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நமது நாடு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி ஒரு நாடாக 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது. இதனை நாம் விடுதலை நாளாக கொண்டாடுகிறோம்.இந்த நாளில் இந்தியா முழுவதும் தேசிய கோடி ஏற்றி மரியாதை செலுத்தப்படும்.

இந்திய நாட்டின் பிரதமர், தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பார். இங்கு நடைபெறும் விழாவில் முப்படை அணிவகுப்பு, நடனம், நாட்டியம் போன்ற பலவகையான வண்ணமய நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.

அதன்படி,நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. ஆனால்,கொரோனா காரணமாக சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி / ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும்,கூட்டத்தை தவிர்க்கும் வகையில்,பொதுமக்கள், மாணவர்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் விழாவினைக் காண நேரில் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து,நாளை கொண்டாடப்படவுள்ள நாட்டின் 75 வது சுதந்திர தினத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்,பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம் என்று கூறி நாட்டின் 75 வது சுதந்திர தினத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“அன்னை நாட்டின் அடிமை விலங்குடைந்து முக்கால் நூற்றாண்டு முடியப்போகிறது. பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம். நமது தன்னிறைவை நாமே எய்தி வாழ்வோம். எட்டுத் திக்கும் விடுதலை என்று கொட்டுக முரசு. சுதந்திரதின வாழ்த்துகள்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்